முகப்பு அண்மை செய்திகள் தனுஷ் இயக்கும் படம் – வெளியான சுவராஸ்ய தகவல்கள்!

தனுஷ் இயக்கும் படம் – வெளியான சுவராஸ்ய தகவல்கள்!

நடிகர் தனுஷ் ‘வாத்தி‘ பட வெற்றியை தொடர்ந்து தற்போது ‘கேப்டன் மில்லர்‘ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த அதிகமான தடைகள் வந்து கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக மதுரை அருகே நடந்து வருகிறது.

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷ் மீண்டும் படத்தை இயக்குவதில் இறங்கியுள்ளார். இப்படத்தில் அவரே நடிக்கவும் உள்ளார். தனுஷின் 50 வது படமான இப்படம் வடசென்னை பகுதியை மையப்படுத்தி உருவாகும் கேங்ஸ்டர் படமாகும். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதில் விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் மட்டுமில்லாமல் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷான் இருவரும் தனுஷிற்கு அண்ணன், தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version