கேன்ஸ் திரைப்பட விழா மும்முரமாக நடந்து வருகிறது. அதில் இந்திய நடிகைகள் விதவிதமான ஆடைகள், அணிகலன்கள் அணிந்து கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரத்தல்லோ பிங்க் கலர் கவுண் அணிந்து காட்சி அளித்ததுடன் அவர் அணிந்திருந்த முதலை வடிவ நெக்லஸ் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் நகை நிபுணரான அருந்ததி ஷேத் என்பவர் ஊர்வசி ரவ்தெலா அணிந்திருந்த நெக்லஸ் போலி என தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் “ இந்த லுக்கை பார்த்து நான் குழம்பியிருக்கிறேன். அவர் கார்டியரின் ஒரிஜினல் மரியா பெலிக்ஸ் முதலை நெக்லஸா அணிந்திருக்கிறார்? பிரான்ஸில் இருக்கும் கேன்ஸுக்கும் சென்றிருக்கிறீர்கள்.
அதுதான் கார்டியரின் சொந்த நாடு. வரலாற்று சிறப்புமிக்க நகையின் போலியை அணிவது வெட்கமாக இருக்கிறது. நம் நாட்டில் ஸ்பெஷலான பொக்கிஷங்கள், நகைகள் இருக்கிறது.
அதை அவர் அணிந்திருக்கலாம் என்றார். இது குறித்து ஊர்வசி ரத்தல்லோ தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “ஊர்வசி ரத்தல்லோ அணிந்திருந்த ஒரிஜினல் முதலை நெக்லஸின் விலை 200 கோடியில் இருந்து 276 கோடியாக உயர்ந்துவிட்டது. அவர் நிஜமான நகையே அணிந்திருந்தார்“ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
