முகப்பு அண்மை செய்திகள் ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கும் பிரபல பாலிவுட் நடிகை

ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கும் பிரபல பாலிவுட் நடிகை

எப்போதும் சினிமா துறையில் நடிகர்களை விட நடிகைகளுக்கு சம்பளத்தை  குறைத்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில் இப்போது பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா முதல் முறையாக ஹீரோவுக்கு சமமான சம்பளத்தை பெற்று இருக்கிறார்.

சமீபத்தில் பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, “நான் முதல் முறையாக ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை பெற்றுள்ளேன். என் 22 வருட சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான விஷயமாக கருதுகிறேன். ஹிந்தி படங்களில் நடிக்கும் போது கொஞ்சம் அதிகம் சம்பளம் கேட்க வேண்டும் என்றாலே பயப்படுவேன்.

தற்போது ‘சிட்டாடல்‘ வெப் தொடரில் நடிக்கும் போது சம்பள விஷயத்தில் கொஞ்சம் பிடிவாதமாகவே இருந்தேன். எனக்கும் ஹீரோவுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்று கேட்டேன்.

ஏதோ அதிசயம் நடந்த மாதிரி நான் கேட்ட சம்பளத்தை தர உடனே ஒப்புக்கொண்டனர். இதை இப்போது கூட என்னால் நம்ப முடியவில்லை“ என நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version