முகப்பு அண்மை செய்திகள் அமோக வரவேற்பை பெற்று வரும் அருள்நிதி படத்தின் டீசர்

அமோக வரவேற்பை பெற்று வரும் அருள்நிதி படத்தின் டீசர்

நடிகர் அருள்நிதி தற்போது இயக்குனர் கௌதமராஜ் இயக்கத்தில் ‘கழுவேத்தி மூர்க்கன்‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குனர் ‘ராட்சசி‘ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் இதில் இவர்களுடன் இணைந்து சந்தோஷ், சாயா தேவி, மற்றும் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் டீசர்  வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதன்படி, இந்த டீசர் 24 மணிநேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version