தொண்ணூறு காலக்கட்டத்தில் படங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்தவர் நடிகை லாவண்யா தேவி. இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழின் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைவருடனும் படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து ‘அருவி‘ சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு 44 வயதாகிறது. இந்நிலையில், அண்மையில் அவருக்கு பிரசன்னா என்பவருடன் திருமணம் முடிந்துள்ள தகவல் சோஷியல் மீடியாவில் பரவ பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். லாவண்யா தேவிக்கும் பிரசன்னா என்பவருக்கும் திருப்பதியில் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் முடிந்துள்ளது.
இதில் ‘அருவி‘ தொடரில் நடித்து வரும் சக நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். லாவண்யாவின் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சக நடிகரான ஈஸ்வர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் லாவண்யா தேவிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
