முகப்பு அண்மை செய்திகள் 4 சர்வதேச விருதுகளை அள்ளிய சமந்தாவின் படம்

4 சர்வதேச விருதுகளை அள்ளிய சமந்தாவின் படம்

நடிகை சமந்தா நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாராகி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் எதிர்பார்ப்போடு வெளிவந்த ‘சாகுந்தலம்‘ படம் படுதோல்வி அடைந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரூ.60 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.10 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. இதில் சமந்தா சாகுந்தலை வேடத்திலும், தேவ்மோகன் துஷ்யந்தனாகவும் நடித்து இருந்தார். இந்நிலையில் இந்த படம் தோல்வியடைந்ததும் சமந்தாவுக்கு எதிராக வலைத்தளத்தில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் ரசிகர்கள் வரவேற்பை பெறாத நிலையிலும் சாகுந்தலம் படத்துக்கு வெளிநாட்டு பட விழாக்களில் விருதுகள் வந்து குவிந்துள்ளன.

ஏற்கனவே நியூயார்க் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில், ‘ பெஸ்ட் பேண்டசி பிலிம், பெஸ்ட் மியூசிக்கல் பிலிம்‘ விருதுகளை வென்றது. இந்நிலையில் தற்போது பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த பேண்டசி பிலிம், பெஸ்ட் காஸ்ட்யூம் டிசைன், பெஸ்ட் இந்தியன் பிலிம் என நான்கு சர்வதேச விருதுகளை ‘சாகுந்தலம்‘ திரைப்படம் பெற்றுள்ளது.

இந்த தகவலை படக்குழுவினர் வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளனர். இதற்கு ரசிகர் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version