முகப்பு அண்மை செய்திகள் 3ம் சார்லஸ் படத்துடன் கரன்சி அறிமுகம் – இங்கிலாந்து அரசு தகவல்

3ம் சார்லஸ் படத்துடன் கரன்சி அறிமுகம் – இங்கிலாந்து அரசு தகவல்

பிரிட்டன் புதிய மன்னர் 3ம் சார்லஸ் படத்துடன் புதிய கரன்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பல ஆண்டுகளாக ராணியாக இருந்தவர் 2ம் எலிசபெத் சமீபத்தில் மரணமடைந்தார். இதைதொடர்ந்து அவரது மகன் சார்லஸ், நாட்டின் புதிய மன்னராக பொறுப்பேற்றார். இற்கிடையில், பிரிட்டனில் உள்ள கரன்சி நோட்டுகளில், அரசாளும் மன்னர் அல்லது ராணியின் படம் இருப்பது வழக்கம். அதன்படி, பல ஆண்டுகளாக இருந்த 2ம் எலிசபெத்தின் படங்களுடன் கூடிய கரன்சிகளே பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது மன்னராக பொறுப்பேற்றுள்ள 3ம் சார்லசின் படத்துடன் கூடிய புதிய கரன்சி நோட்டுகள், தற்போது, அந்நாட்டின் மத்திய வங்கியான ‘பாங்க் ஆப் இங்கிலாந்து’ அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய கரன்சிகள், விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. புதிய கரன்சிகள் புழக்கத்துக்கு வந்தாலும், ஏற்கனவே உள்ள கரன்சி நோட்டுகளையும் மக்கள் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version