முகப்பு அண்மை செய்திகள் அதிமுக சிதறி கிடக்கிறது… நாங்கள் பதறி துடிக்கிறோம் – முன்னாள் அமைச்சரின் போஸ்டரால் பரபரப்பு

அதிமுக சிதறி கிடக்கிறது… நாங்கள் பதறி துடிக்கிறோம் – முன்னாள் அமைச்சரின் போஸ்டரால் பரபரப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பு போஸ்டரை ஒட்டியுள்ளார். இதனார், அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு, அதிமுக இரண்டாக பிளவுபட்டது. ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு தரப்பினர், அதிமுகவுக்கு உரிமை கொண்டாடினர். ,இதனால், ஆட்சி பறிபோகும் நிலை ஏற்பட்டது. இதை உணர்ந்த அவர்கள், சமரசம் பேசி ஒன்றாக இணைந்தனர். இதை தொடர்ந்து ஆட்சியில் முதல்வராக எடப்பாடியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டனர். அதேபோல் கட்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாராக ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடியும் இருந்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின், அதிமுகவில் பொது செயலாளர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது. இதனால் மீண்டும் அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டது. இரு அணிகளா பிரிந்த அவர்கள், கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து தனி கூட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தவேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்தார். அவர் பாஜக மற்றும் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தார். இதனால் அவர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், வரும் 24ம் தேதி எம்ஜிஆர் நினைவு நாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, ராமநாதபுரம் பகுதி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதில்,, ‘‘தலைவா நீங்கள் துவங்கிய அதிமுக சிதறி கிடக்கிறது. நாங்கள் பதறி துடிக்கின்றோம். காப்பாற்றுங்கள்’’ என குறிப்பிட்டுள்ளது. இதனால், அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version