தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் கலக்கி வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதிலும் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை துணிச்சலுடன் நடித்து வருபவர். இவர் தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி‘ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவார். அதன்பின் இவர் நடிக்கும் பல படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்துள்ளார். அதிலும் இவர் நடித்த ‘சண்டைக்கோழி, சர்கார்‘ படத்தில் இவருடைய கதாபாத்திரத்தை சூப்பராக நடித்து கலக்கியிருப்பர். இவருக்கு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்‘ படத்தில் ஜெனிலியாக்கு பதிலாக முதலில் இவர்தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் அழைப்பு விடுத்திருக்கிறார். இவரும் ஆடிசன், ஸ்கிரீனிங் டெஸ்ட் என அனைத்தையும் முடித்துவிட்டு மிகவும் ஆசையாக இருந்திருக்கிறார். ஆனால் இவருடைய அப்பா அப்பொழுது நடிப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை.
அதன் பிறகு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் வெற்றி படமான ‘காதல்‘ படத்திற்கு சந்தியாவிற்கு பதிலாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு தான் முதலில் வந்தது. அப்பொழுது சரத்குமார், நடிப்பு இப்பொழுது வேண்டாம் முதலில் படிப்பை முடித்த பின்பு நடிப்பது பற்றி யோசிக்கலாம் என்று கண்டிஷன் போட்டுவிட்டார். இப்படி பல நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார். ஆனால் இப்பொழுது நடிக்கனும் வந்த பிறகு ஹீரோயின் வாய்ப்பை விட வில்லிக்கு தான் என்னை கூப்பிடுகிறார்கள். அது மிகவும் வேதனையை கொடுக்கிறது. அதனால் தான் தற்போது இவர் தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் அதிகம் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.
