முகப்பு அண்மை செய்திகள் ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை வாங்கும் பிரபல நடிகை

ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை வாங்கும் பிரபல நடிகை

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம்தூம்‘ படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் ‘தலைவி‘ படத்தில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

மேலும் தற்போது ‘சந்திரமுகி-2‘ படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியில், “ இந்தி திரையுலகில் எனக்கு சிலருடன் பிரச்சனை இருந்தது. இதனால் படங்களில் நடிக்க விடாமல் என்னை ஒதுக்கி வைத்தனர். அங்கு நடந்த அரசியல் விளையாட்டு பிடிக்காமல் இந்தி சினிமாவில் இருந்து விலகி ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். இப்போது கதாநாயகனுக்கு இணையான சம்பளம் பெறுகிறேன்“ என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது கங்கனா அளித்துள்ள பேட்டியில், “ இந்தி இயக்குனர் கரண் ஜோகரால் தான் பிரியங்கா சோப்ரா இந்தி திரையுலகை விட்டு வெளியேறினார். கதாநாயகனுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்று முதன் முதலில் பேசிய நடிகை நான்தான். இதற்காக பல பிரச்சனைகளை எதிர்கொண்டேன். நான் நடிக்க வேண்டிய கதாபாத்திரங்களில் வேறு நடிகையை நடிக்க வைத்தார்கள்.

அந்த கதாபாத்திரத்தில் சம்பளம் வாங்காமல் இலவசமாக நடித்து கொடுக்கவும் நடிகைகள் முன் வந்தனர். அதன்பின் பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போது நானும் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் பெறுகிறேன் “ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version