நடிகர் கார்த்திக் பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘ஜப்பான்‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் அனு இம்மானுவேல், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கார்த்தியின் 25-வது படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இன்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
அதாவது இப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘யார் ஜப்பான்‘? என்பது பற்றிய சிறிய வீடியோவையும்.
இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளிக்கான தமிழ்ப் படங்களின் வெளியீடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டி அதிகரித்து வருகிறது.
இதற்கு முன்பே சிவகார்த்திகேயனின் ‘அயலான்‘ மற்றும் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்‘ ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ‘ஜப்பான்‘ படமும் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது.
