முகப்பு அண்மை செய்திகள் ஹன்சிகா நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு

ஹன்சிகா நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு

தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகும் நடித்து வரும் ஹன்சிகா தற்போது புதிய சைக்காலஜிக்கல் திகில் கதையில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘கலாப காதலன்‘ படத்தை இயக்கிய இகோர் இயக்குகிறார். இப்படத்திற்கு சரண்யா பாக்யராஜ் திரைக்கதை எழுதியுள்ளார். மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள நிலையில், இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  இப்படம் ‘மேன்‘ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது.

இதில் ஆரி அர்ஜுனன் வில்லனாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பற்றி இயக்குனர் இகோர் கூறியதாவது, “ஆண்மை என்பது அகங்காரமாக மாறி பெண்களை அடக்கி ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது. இதை எதிர்க்கும் ஒரு பெண்ணின் போராட்டமே படம். ஹன்சிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இதில் வித்தியாசமான ஹன்சிகாவை பார்க்கலாம்“, என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version