முகப்பு ஆன்மிகம் வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் விழா – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் விழா – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட உள்ளதால், வேளாங்கண்ணியில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணியில், ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி, இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அதிரடியாக நடந்து வருகிறது.

இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ பேராலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘பசிலிக்கா’ என்ற பெருமை மிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி மாதா ஆலயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கிய மாதா பேராலயம், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக திகழ்கிறது.

இதுபோல், பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் 2024 புத்தாண்டை வரவேற்கும் விதமாக வேளாங்கண்ணி பேராலய தியான மண்டபம் செல்லும் வழி முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. வரும் 25ம் தேதி கொண்டாடப்படு உள்ள கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மின்விளக்கு அலங்காரம் செய்ய பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடக்கிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version