முகப்பு சினிமா நாற்காலிக்கு ஆசைப்படும் இயக்குநர் அமீர்!

நாற்காலிக்கு ஆசைப்படும் இயக்குநர் அமீர்!

 

அரசியலுக்கு வரும் திட்டம் உள்ளதா? என்கிற கேள்விக்கு இயக்குநரும், நடிகருமான அமீர் பதில் அளித்திருக்கிறார்.

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’.‘மாநாடு’என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.

கதையின் நாயகனாக அமீர் நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

‘உயிர் தமிழுக்கு’படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். தமிழ் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்து, 20 வருடங்களை கடந்த அமீரை கவுரவிக்கும் விதமாக படக்குழுவினர் அவருக்கு ஆளுயர மாலை அணிவித்தனர்.

 

பின்னர் படத்தின் நாயகனான  ‘உயிர் தமிழுக்கு’அமீர், பட அனுபவம் குறித்து பேசும்போது,‘தமிழ் திரையுலகில்  மௌனம் பேசியதே படம் மூலம் அடி எடுத்து வைத்து இருபது வருஷம் ஆகிவிட்டது. திரையுலகில் 20 ஆண்டுகள் இருப்பதே ஒரு சாதனை தான்.

நான் கரை வேட்டி கட்டிய அரசியலை படமாக இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த சமயத்தில்தான் இந்த கதை என்னிடம் வந்தது. ஆரம்பத்தில் இந்த படத்திற்கு வேறு ஒரு டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை வெளியிடுகிறார் என்றதும் எனது படத்திற்காக வைத்திருந்த உயிர் தமிழுக்கு என்கிற டைட்டில் இதற்கு பொருத்தமாக இருந்ததால் உடனே கொடுத்துவிட்டேன்.

இது மொழியை பற்றி பேசும் படமே தவிர மொழிப்பிரச்சினையை பற்றி பேசவில்லை! சமீப காலமாக இந்தி திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்த தலைப்பு தற்போது அவசியமாகிறது. நேரடி அரசியலுக்கு வரும் தகுதியை நான் இன்னும் வளர்த்து கொள்ளவில்லை’என்று கூறினார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version