தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கரும்பூர் புனித கண்பிரகாசியம்மாள் ஆலய தேர்பவனி சிறப்பாக நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குரும்பூர் புனித கண்பிரகாசியம்மாள் ஆலயத்தில், கடந்த 4ம் தேதி திருவிழா துவங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் அடிகளார், மறைமாவட்ட பங்குத்தந்தை பவிஷின் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாலை 6.30 மணிக்கு திருவிழா ஆராதனையும், புனித கண் பிரகாசி அம்மாள் தேர்பவனி நடந்தது.
இதில் ஆழ்வார் திருநகரி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஜனகர், அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், அங்கமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா, குரும்பூர் பரதர் நல கமிட்டி தலைவர் சிலுவை அந்தோணி சவரிமுத்து மற்றும் ஊர் மக்கள் பலரும் இணைந்து வடம் பிடித்து தேர்பவனியைதொடங்கிவைத்தனர்.
நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பொருளாளர் சகாயம் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பபிஸ்டன் மற்றும் குரும்பூர் பரதர் ஊர் நல கமிட்டியினர் இணைந்து நடத்தினர்.
