முகப்பு அண்மை செய்திகள் விரைவில் வெளியாகும் ‘ஜவான் ‘ டிரைலர்

விரைவில் வெளியாகும் ‘ஜவான் ‘ டிரைலர்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ. இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான அனைத்துப் படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார் அட்லீ.

இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் முதல் முறையாக அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்‘ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ‘ஜவான்‘ திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version