‘பொன்னியின் செல்வன்‘ படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள படம் ‘அகிலன்‘. இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் ஹார்பரில் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் NOC அனுமதியில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது அனைத்து அனுமதிகளை பெற்று இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
