முகப்பு அண்மை செய்திகள் விரைவில் உருவாகும் ‘கரகாட்டக்காரன்‘ படத்தின் இரண்டாம் பாகம்…!

விரைவில் உருவாகும் ‘கரகாட்டக்காரன்‘ படத்தின் இரண்டாம் பாகம்…!

கங்கை அமரன் இயக்கத்தில் 1989-ம் ஆண்டு வெளியான படம் ‘கரகாட்டக்காரன்-2‘. இப்படத்தில் ஹீரோவாக ராமராஜன் நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை கனகா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து கவுண்டமணி, செந்தில் என பலர் நடித்து இருந்தனர்.

இந்த படம் அன்றைய காலக் கட்டத்தில் தியேட்டர்களில் ஓராண்டுக்கு மேலாக ஓடி சாதனை செய்தது. இந்நிலையில் தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தின் முதல் பாகத்தில் ராமராஜன் நடித்த வேடத்தில் மிர்ச்சி சிவா நடிக்கிறார்.

அதோடு முதல் பாகத்தில் நடித்த கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோரும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். மேலும்   கரகாட்டக்காரன் படத்திற்கு இளையராஜா இசை அமைத்த நிலையில் தற்போது அவரது மகனான யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version