முகப்பு அண்மை செய்திகள் ‘விடுதலை‘ படம் பான் இந்தியா படமாக வெளியாகவில்லை ஏன்? – விளக்கமளித்த வெற்றிமாறன்…!

‘விடுதலை‘ படம் பான் இந்தியா படமாக வெளியாகவில்லை ஏன்? – விளக்கமளித்த வெற்றிமாறன்…!

இன்றைய இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் அனைத்தும் பான் இந்தியா படமாக வெளிவர வேண்டும் என்று குறிக்கோள் வைத்து அதற்கு ஏற்ற மாதிரி கதைகளையும்  நடிகர் நடிகைகளையும் வைத்து உருவாக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. அப்பொழுது தான் அவர்கள் எதிர்பார்த்த அளவைவிட லாபமும் வரும் அதே நேரத்தில் ஈஸியாக ஃபேமஸ் ஆகிவிடலாம் என்று நம்பிக்கையில் படத்தை இயக்குகிறார்கள். ஆனால் இதற்கிடையில் சற்று வித்தியாசமாக வெற்றிமாறன் இருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை‘ படம் ரசிகர்களிடையே அதிகமான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் வரும் அனைத்து படங்களும் பான் இந்திய படமாக எடுத்து வசூல் வேட்டையை அதிகரிக்கின்றனர். ஆனால் ‘விடுதலை‘ படம் ஏன் பான் இந்தியா படமாக எடுக்கப்படவில்லை என்று கேட்டபோது அதற்கு வெற்றிமாறன் கொடுத்த பதில் மிகவும் அதிர்ச்சியையும், ஆச்சரியப்படவும் வைத்துள்ளது. அதாவது இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அதில் ஒன்று இந்த படத்தை அப்படி எடுத்தால் அதற்கு ஏற்ற மாதிரி மற்ற மொழிகளில் இருந்தும் சில நடிகர் நடிகைகளை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும். ஆனால் எனக்கு அப்படி செய்வது விருப்பமில்லை, அத்துடன் அவர்கள் இந்த கதைக்கு ஏற்ற மாதிரி எனக்கு செட்டே ஆகாது என்று கூறி இருக்கிறார்.

அடுத்ததாக வடநாட்டில் இருப்பவர்கள் இப்படத்தை பார்த்துவிட்டு ஏதாவது விபரீதமாக செய்து விடுவார்கள் என்று பெரிய அளவில் அச்சம் இருந்ததால் பான் இந்தியா படமாக எடுப்பதை தவிர்த்து விட்டேன் என்று கூறி இருக்கிறார். ஏனென்றால் அங்கே தீவிரவாதம் எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. அதனால் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இதைப் பற்றி யோசிக்கவில்லை என்று தெனாவட்டாக பதில் அளித்து இருக்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version