முகப்பு அண்மை செய்திகள் விஜய்க்கு வில்லனாகும் ‘ஆக்க்ஷன் கிங்‘

விஜய்க்கு வில்லனாகும் ‘ஆக்க்ஷன் கிங்‘

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் 67-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்திற்காக நீண்ட தலைமுடி வளர்த்து, தாடி வைத்து கேங்ஸ்டர் கெட்டப்புக்கு மாறியிருக்கிறார் விஜய். இந்த படத்தில் அவருடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின். கவுதம் மேனன், நிவின் பாலி மற்றும் மன்சூர் அலிகான் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் ஆக்க்ஷன் கிங் அர்ஜுன், விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதன்முறையாக அர்ஜுன் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்.  இந்நிலையில், அர்ஜுன் வில்லனாக நடிக்க இருப்பதால் அதற்காக தனது கெட்டப்பை பெரிய அளவில் மாற்றி இருக்கிறார். தலையில் அதிகப்படியான முடியும், விருமாண்டி மீசையும் வைத்திருக்கிறார். அவரது இந்த கெட்டப்பை பார்க்கும்போது அர்ஜுனும், விஜய் 67 படத்தில் முக்கியமான வில்லன்களில் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. அது குறித்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version