முகப்பு அண்மை செய்திகள் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘விமல்‘

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘விமல்‘

நடிகர் விமல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இதற்கு பதிலளிக்கும் வகையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் படத்தை வெளியிட்டு நான் நலமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விமல் மதுவுக்கு அடிமையாகிவிட்டார் அதிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார் என்ற தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து விமல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். “அதில் அவர் பேசியிருப்பதாவது, எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக  தகவல் பரவியது. அப்படி எதுவும் இல்லை. நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். இப்போது கூட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறேன்.

நான் மதுவுக்கு அடிமையாகிவிட்டதால் வீட்டிலேயே சிகிச்சை நடப்பதாக இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. இது சிரிப்பாகவும், காமெடியாகவும் இருக்கிறது. வேண்டாத விஷக்கிருமிகள் எனக்கு எதிராக இதை செய்கிறார்கள். அவர்கள் யார் என்பதும் எனக்குத் தெரியும். இந்த மாதிரியான சின்னப்பிள்ளைத்தனமான வேலையை விட்டுவிட்டு உழைக்கிற வேலைய பாருங்கள், வாழவிடுங்கள், நீங்களும் வாழுங்கள், காயப்படுத்த நினைக்காதீர்கள்“, என்று அவர் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version