தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் ‘போர் தொழில்‘. இப்படத்தை புதுமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். இது க்ரைம் த்ரில்லர் கதையில் உருவான இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் சாதனைப் படைத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படம் படம் கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் நேற்று சென்னையில் ‘போர் தொழில்‘ படக்குழுவினர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர். அப்போது இந்த படத்தின் விநியோகஸ்தர் மேடையில் இந்த படம் உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது என கூறியுள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
