இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்‘ என்ற பாணியில் படங்களை எடுத்து வரும் நிலையில், அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் தற்போது கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரஷாந்த் நீலும் களம் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. ‘கே.ஜி.எஃப் 2‘ டத்தை அடுத்து தற்போது பிரபாஸை வைத்து ‘சலார்‘ படத்தை இயக்கிவரும் பிரஷாந்த் நீல், ‘கே.ஜி.எஃப்‘ கதையும் ‘சலார்‘ கதையையும் தொடர்புபடுத்தி ஒரு புது யுனிவர்ஸை உருவாக்கியுள்ளார்.
அதனால் ராக்கி பாய் கதாபாத்திரம் இப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் வருவதால் யஷ்ஷை நடிக்க அணுகியுள்ளார் பிரஷாந்த் நீல். அந்த கதாபாத்திரம் மூலம் இந்திய அளவில் தனக்கு கவனம் கிடைத்ததால், சற்றும் யோசிக்காமல் அதற்கு ஓ.கே சொல்லிவிட்டார் நடிகர் யஷ். இப்படத்தில் ராக்கி பாயை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
