முகப்பு அண்மை செய்திகள் ரிலீஸ்க்கு தாமதமாகும் ‘சலார்‘

ரிலீஸ்க்கு தாமதமாகும் ‘சலார்‘

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம் ‘சலார்‘. இதில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார்.

கொரோனா பிரச்சனையால் இந்த படம் மூன்று ஆண்டுகளாக தயாராகி வருகிறது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படம் வரும் செப்டம்பர் 28-ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. ஆனால் திட்டமிட்டப்படி படம் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தகவல் பரவியது.

இதை மறுத்துள்ள இப்படக்குழு, ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என குறிப்பிட்டு மீண்டும் அதே ரிலீஸ் தேதியை வெளியிட்டு உறுதி செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version