முகப்பு அண்மை செய்திகள் ராஜமவுலியை கொலை செய்ய காத்திருக்கும் இயக்குனர்கள் – ரகசியத்தை உளறிய இயக்குனர் ராம்கோபால் வர்மா!

ராஜமவுலியை கொலை செய்ய காத்திருக்கும் இயக்குனர்கள் – ரகசியத்தை உளறிய இயக்குனர் ராம்கோபால் வர்மா!

‘பாகுபலி‘ படத்தின் இரண்டு பாகங்களை தொடர்ந்து கடந்த வருடம் வெளியான ‘ஆர்ஆர்ஆர்‘ படத்தின் வெற்றியால் இந்திய அளவில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டதோடு வெளிநாடுகளிலும் பாராட்டப்படுகின்ற, தேடப்படுகின்ற ஒரு இயக்குனராக மாறிவிட்டார் இயக்குனர் ராஜமவுலி.

சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு‘ பாடல் சிறந்த ஒரிஜினல் சாங் என்கிற பிரிவில் மிக உயரிய விருதான கோல்டன் குளோப் விருதை வென்றது. தற்போது விரைவில் அறிவிக்கப்பட உள்ள ஆஸ்கர் விருதுக்காக சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. இந்நிலையில் சர்ச்சையான கருத்துக்களை எப்போதுமே கூறி வரும் இயக்குனர் ராம்கோபால் வர்மா, ராஜமவுலி குறித்து புகழ்ந்து கூறும் விதமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

சமீபத்தில் ராஜமவுலியிடம் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனும் சந்தித்து உரையாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள ராம்கோபால் வர்மா இயக்குனர்கள் கா ஆசிப், ரமேஷ் சிப்பி ஆகிய இயக்குனர்களை எல்லாம் ராஜமவுலி ஓவர்டேக் செய்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், “ராஜமவுலி சார்… தயவு செய்து உங்களது பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்தியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட அளவிலான இயக்குனர்கள் உங்கள் மீதான பொறாமையால் உங்களைக் கொல்வதற்காக ஒரு புதிய ஸ்குவாட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள், அதில் நானும் ஒருவனாக இருக்கிறேன். தற்போது குடித்திருப்பதால் இந்த ரகசியத்தை நான் வெளிப்படுத்தி விட்டேன்“ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version