லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்‘ படம் சூப்பர் ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து தற்போது அவர் விஜய்யை வைத்து ‘லியோ‘ படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் ‘கைதி-2, விக்ரம்-2‘ படங்களை இயக்குவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் ‘விக்ரம்‘ படத்திற்கு முன்பே கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் ஒரு படம் இயக்குவதாக இருந்தது. பின்னர் அந்த படம் கைவிடப்பட்ட நிலையில் ‘விக்ரம்‘ படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜை போனில் தொடர்புகொண்டு பேசி உள்ளாராம் ரஜினிகாந்த். அதன்படி ஏற்கனவே கமல் தயாரிப்பில் நடிப்பதற்கு தன்னிடம் கூறிய படத்தை இயக்க சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ‘லியோ‘ படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம் ரஜினி ‘ஜெயிலர்‘ படத்திற்கு பின் தனது மூத்தமகளான ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்‘ படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளார். அதன்பின் ‘ஜெய்பீம்‘ இயக்குனர் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. இதையெல்லாம் முடித்துவிட்டு அதன்பிறகே லோகேஷ் படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.
