முகப்பு அண்மை செய்திகள் ரஜினியின் கடைசி படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் – இயக்குனர் மிஷ்கின் பேட்டி

ரஜினியின் கடைசி படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் – இயக்குனர் மிஷ்கின் பேட்டி

இயக்குனர்கள் பாரதிராஜா, கவுதம் மேனன், செல்வராகவன் போல் தற்போது இயக்குனர் மிஷ்கினும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்‘ படத்தில் வில்லனாகவும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ‘ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், “விஜய் நடித்த யூத் படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த போது அவர் வளர்ந்து வரும் ஒரு ஸ்டார் நடிகராக இருந்தார்.

இந்நிலையில் தற்போது லியோ படத்தில் நடிப்பதற்காக நான் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற போது என்னை கட்டி தழுவி வரவேற்றார். அப்போது நான் அவரை ஒரு நட்சத்திரத்தை போல் பார்க்கவில்லை. குழந்தையாகவே பார்த்தேன். அந்த அளவுக்கு என்னை பார்த்ததும் மென்மையாக சிரித்தார்.

அவரிடத்தில் தான் ஒரு உச்ச நட்சத்திரம் என்ற எந்த எண்ணமும் இல்லை. தன்னை ஒரு சாதாரண மனிதராகவே நினைத்துக் கொள்கிறார்“ என்று கூறியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

மேலும் தற்போது லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக ரஜினி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும், அந்த படம் தான் ரஜினியின் கடைசி படம் என்று அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

இதன் மூலம் ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், இதுவே ரஜினியின் கடைசி படம் என்று இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version