மலையாளத்தில் ‘பிரேமம்‘ படம் எடுத்ததன் மூலம் பிரபலமான இயக்குனராக அல்போன்ஸ் புத்ரன் மாறினார். இப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகை சாய்பல்லவியும் பிரபலமானார் . இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அல்போன்ஸ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் ரஜினிக்கு ஒரு கோரிக்கை விடுத்து ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “ அடிக்கடி உங்கள் மனதில் தோன்றிய கருத்துக்களை வீடியோவாக வெளியிடுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் அதை கேட்க ரசிகர்கள் இருக்கிறார்கள். உங்கள் கருத்துக்கள் வரவேற்பை பெறும்“ என அல்போன்ஸ் புத்ரன் கூறியுள்ளார்.
