முகப்பு அண்மை செய்திகள் மோகன்லால் படத்தில் நடிக்கும் சிரஞ்சீவி

மோகன்லால் படத்தில் நடிக்கும் சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் தற்போது இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இதில் இவருடன் இணைந்து திரிஷா, சித்து ஜோனலகட்டா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் மலையாளத்தில் மோகன்லால், பிரித்விராஜ் நடித்து வெளிவந்த ‘ப்ரோ டாடி‘ படத்தின் ரீமேக் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது திருமணமான ஒரு இளைஞன், ஒரே நேரத்தில் அண்ணனாகவும், அப்பாவாகவும் புரொமோஷன் ஆனால் என்ன நடக்கும் என்பது மாதிரியான கதைக்களத்தில் ‘ப்ரோ டாடி‘ படம் வெளிவந்தது.

மலையாளத்தில் மோகன்லால் நடித்து வரவேற்பை பெற்ற இந்த படத்தை இப்போது சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்ய போகிறார்கள்.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி குறைவான நாட்களிலே படப்பிடிப்பை முடித்து 2024-ல் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சிரஞ்சீவி மகள் சுஷ்மிதா தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version