முகப்பு அண்மை செய்திகள் முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை

முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்‘ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவார் நடிகை சோனியா அகர்வால். அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் சினிமாவில் பிஸியாக நடித்து வந்த காலத்திலேயே இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர்.

அதன் பின் மீண்டும் நடிக்கத் தொடங்கிய சோனியா அகர்வாலுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க களமிறங்கியுள்ளார் நடிகை சோனியா அகர்வால்.

இயக்குனர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்கத்தில் ‘உன்னால் என்னால்‘ என்ற படத்தில் வில்லியாக நடித்து வருகிறார்.

இதில் கே.ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ், டெல்லி கணேஷ், ஆர்.சுந்தரராஜன், மோனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தினை ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ளார்.

இதில் பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்யும் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடிக்கிறார். சோனியா அகர்வால் வில்லியாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version