அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘துணிவு‘ படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித்தின் 62 வது படமாக உருவாகும் இந்த படத்தின் பணிகள் துவங்கி உள்ளன. இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒருவேளை அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பாக அமையும். இதற்கு முன் கடந்த 2000 –ம் ஆண்டு வெளியான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்‘ படத்தில் அஜித், மம்முட்டி, தபு, அப்பாஸ் உடன் ஐஸ்வர்யா ராயும் நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
