முகப்பு சினிமா சின்னத்திரை மீண்டும் தாயான பிரபல நடிகை

மீண்டும் தாயான பிரபல நடிகை

 

சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். இவர் முதலில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் சீரியல்களில் என்ட்ரி கொடுத்து பிரபலமானார். இவர் ‘தங்கம், கஸ்தூரி, ராஜா ராணி, காற்றுக்கென்ன வேலி‘ உள்ளிட்ட பல சீரியல்களில் சப்போர்ட்டிங் கேரக்டரிலும், வில்லியாகவும் மிரட்டினார். இந்நிலையில் இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே அசோகா சிண்டாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சித்தாரா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

மேலும் நடிகை ஸ்ரீதேவி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி மற்றும் மோதலும் காதலும் ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமான மகிழ்ச்சியான செய்தியை தனது கணவர் மற்றும் மகளுடன் குடும்பமாக போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீதேவிக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

 

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version