முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பது மட்டுமில்லாமல் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர். மேலும் இவர் வுண்டர்பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் “3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கா முட்டை, காக்கிச்சட்டை, மாரி“ உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். தான் நடித்த படங்கள் மட்டுமின்றி பிற நடிகர்களின் படங்களையும் நடிகர் தனுஷ் தயாரித்து வந்தார். இந்நிலையில் இடையில் சில காலம் படங்களை தயாரிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார். இப்போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்கியுள்ளார்.
இதை மாரி செல்வராஜ் இயக்குகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ‘கர்ணன்‘ என்ற வெற்றி படம் வெளியானது. தற்போது மீண்டும் இவர்கள் இணைந்து படம் பண்ணுகிறார்கள். நடிகர் தனுஷ் இப்படத்தை தயாரிப்பதோடு இதில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார். இப்படம் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் 15-வது படமாக இந்தப்படம் உருவாகிறது.
தனுஷ், மாரி செல்வராஜ் இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக உள்ளனர். அதை முடித்த பின் இவர்கள் இணைந்து படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார் தனுஷ்.
