தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லைலா. அதன் பின் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டதால் சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் கார்த்தியின் ‘சர்தார்‘ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமா வாழ்க்கைக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன்பின் ‘வதந்தி‘ என்னும் வெப்சீரிஸில் நடித்தார். இப்போது ஈரம் படத்தின் இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகும் ‘சப்தம்‘ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க லைலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக லக்ஷ்மி மேனன் நடிக்கும் நிலையில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா இணைந்திருக்கிறார். லைலாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்யம் தரும் வகையிலும், மிக அழுத்தமான பாத்திரமாகவும் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஹாரர் திரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது.
