புனிதமான கோயில்களுக்குள் இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாரம்பரிய உடைகளை தவிர்த்து மாடர்ன் உடைகளை அணிந்து வருவது தற்போது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கோயில்களுக்குள் மாடர்ன் உடைகளை அணிந்து வர தடை செய்து கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
கோயிலுக்குள் இளம் பெண்கள் கவர்ச்சியான உடை அணிந்து நிற்கும் படத்தை வெளியிட்டு அவர் பதிவிட்டிருப்பதாவது, “நான் ஒருமுறை வாடிகனுக்கு ஷார்ட்ஸ் டி-சர்ட் அணிந்து சென்றேன். என்னை வளாகத்துக்குள் கூட அனுமதிக்கவில்லை.
நான் மீண்டும் ஹோட்டலுக்கு சென்று உடைகளை மாற்ற வேண்டி இருந்தது. ஆனால் ஆங்கிலேயர்களின் உடைகளை அணிந்து இன்று சர்வசாதரணமாக கோயிலுக்கு செல்கிறார்கள். கோயில்களுக்குள் இரவு உடைகளை அணியும் இந்த கோமாளிகள், சோம்பேறிகள் மற்றும் முட்டாள்களுக்கு எதிராக கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
