தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வந்தவர் இயக்குனர் செல்வராகவன். இவர் படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு சமீபகாலமாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் இயக்கத்தில் ‘ 7 ஜி ரெயின்போ காலனி‘ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு செல்வராகவன், கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் தங்களது 13 வது திருமண நாளை ஒட்டி சோஷியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டு உள்ளார் இயக்குனர் செல்வராகவன்.
அந்த பதிவில், “ உன்னுடன் 13 ஆண்டுகள் வாழ்ந்தது சிறப்பான நாட்கள். நீ இல்லாமல் இந்த 13 ஆண்டுகளில் நான் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான நபர் நீ. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் “ என்று பதிவிட்டு மனைவி கீதாஞ்சலி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் செல்வராகவன்.
