முகப்பு அண்மை செய்திகள் மதுப்பழக்கத்தினால் வாழ்க்கையை இழந்த பிரபல நடிகை

மதுப்பழக்கத்தினால் வாழ்க்கையை இழந்த பிரபல நடிகை

தமிழ் திரையுலகில் எண்பது மற்றும் தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் கமல்ஹாசனின் ‘இந்தியன்‘, அர்ஜுனின் ‘முதல்வன்‘ மற்றும் ரஜினியின் ‘பாபா‘ உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வரவேற்பை பெற்றதால், ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

இவர் கடந்த 2010-ம் ஆண்டு சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்து கொண்டு 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் தனக்கு இருந்த மதுப்பழக்கம் குறித்து மனிஷா கொய்ராலா பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “ நான் விவாகரத்து பெற்றதும் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டேன். மதுப்பழக்கத்துக்கு அடிமையானேன். அதன் பிறகு வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது.

மதுப்பழக்கம் காரணமாக எனது மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன். மது அருந்துவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது. மது எந்த பிரச்சினையில் இருந்தும் நம்மை வெளியேற்றாது. மேலும் பிரச்சினைகளில் மூழ்கடிக்கவே செய்யும். இதனை புரிந்து கொண்டு நடக்க வேண்டும் “என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version