முகப்பு அண்மை செய்திகள் மதுபான பிசினஸ் தொடங்குவதற்காக நடிகைகளுக்கு பார்ட்டி – உல்லாசத்தில் இருந்த ஷாருக்கான் மகன்…!

மதுபான பிசினஸ் தொடங்குவதற்காக நடிகைகளுக்கு பார்ட்டி – உல்லாசத்தில் இருந்த ஷாருக்கான் மகன்…!

ஹிந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்‘ படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது அட்லீ இயக்கத்தில் ‘ஜவான்‘ என்னும் படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2021-ல் மும்பையில் உள்ள கப்பல் ஒன்றில் போதை விருந்தில் கலந்து கொண்டார் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான்.

தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தியதாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதன் பிறகு இந்த விவகாரத்தில் அவர் குற்றமற்றவர் என கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது.

இந்நிலையில் ஆரியன்கான் விரைவில் இயக்குனராக அறிமுகமாக போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவர் புதிதாக மதுபான பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இதனை விளம்பரப்படுத்தும் வகையில் சினிமா மற்றும் டிவி நடிகர் நடிகைகளுக்கு மும்பையில் அவர் ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார். அப்போது பல நடிகைகளுடன் ஆரியன்கான் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version