இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன் , பிரபு, விக்ரம் பிரபு மற்றும் ஜெயராம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர். சரித்திர படமான பொன்னியின் செல்வன் ரூ. 500 கோடி வசூல் செய்து சாதனையை படைத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ல் திரைக்கு வருகிறது. தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மேலும் புரோமோஷன் பணிகள் துவங்கியுள்ளன.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடலை மார்ச் 20-ல், மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இப்பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். மேலும் இது தொடர்பாக ஒரு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் வாளை ஏந்திய குந்தவை திரிஷாவிடம் கண்களை கட்டிய படி வந்தியதேவன் கார்த்தி மண்டியிட்டு இருப்பது போன்று உள்ளது.
