முகப்பு அண்மை செய்திகள் புடவைக்கு மாறிய பூஜா ஹெக்டே – நெகிழ்ந்துபோன ஒரு மில்லியன் பார்வையாளர்கள்!

புடவைக்கு மாறிய பூஜா ஹெக்டே – நெகிழ்ந்துபோன ஒரு மில்லியன் பார்வையாளர்கள்!

நடிகைகள் பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களைத்தான் அதிகம் பதிவிடுவார்கள். எப்போதாவது ஒரு முறைதான் கலாச்சார உடை அணிந்து பதிவிடுவார்கள். இந்த கால இளைஞர்களுக்கு பெண்கள் புடவை அணிந்திருந்தால் மிகவும் பிடிக்கும். அந்த அளவிற்கு புடவை என்பது பெண்களுக்கு தனி அழகை சேர்க்கும் என்பது பலரின் கருத்து. இந்நிலையில் விஜய்யுடன் ‘பீஸ்ட்‘ படத்தில் நடிகையாக நடித்த பூஜா ஹெக்டே நேற்று(பிப்.01) அவருடைய இன்ஸ்டாவில் புடவை அணிந்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

அவரது அண்ணனுக்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அப்போது அவரும் புடவை அணிந்து, நகை அலங்காரத்துடன் எடுத்த சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அவற்றிற்கான லைக்குகள் ஒரு மில்லியனை தாண்டியுள்ளது. மேலும் எண்ணற்ற கருத்துகளும் கிடைத்துள்ளன. பூஜா தற்போது சல்மான் கான் ஜோடியாக ‘வீரம்‘ ஹிந்தி ரீமேக்கான ‘கிசி கா பாய் கிசி கா ஜான்‘ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் மகேஷ் பாபுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version