முகப்பு அண்மை செய்திகள் பிரபல தமிழ் நடிகையின் மகள் +2வில் அசத்தல் மார்க்..!

பிரபல தமிழ் நடிகையின் மகள் +2வில் அசத்தல் மார்க்..!

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சின்னத்திரையிலும் ‘கோலங்கள்‘ தொடரின் மூலம் அதிக புகழ் பெற்றார்.

சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘புதுப்புது அர்த்தங்கள்‘ தொடரில் நடித்து இருந்தார். இவருக்கு இனியா, ப்ரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான இனியா நடந்து முடிந்த பொதுத்தேர்வில் +2 எழுதியிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் +2 தேர்வு மதிப்பெண்கள் வெளியான நிலையில், தேவயானியின் மகள் இனியா 600க்கு 492 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.

இதனையடுத்து தேவயானியின் மகளுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version