முகப்பு அண்மை செய்திகள் படத்திற்காக உண்மையாகவே மது அருந்திய பிரபல நடிகர்

படத்திற்காக உண்மையாகவே மது அருந்திய பிரபல நடிகர்

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி தற்போது  ஸ்ரீகாந்த் ஓடலா இயக்கத்தில் ‘தசரா‘ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய படமாக உருவாகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன்  இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் நடிகர் நானி ஒரு நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், “இந்த படத்தின் உண்மை தன்மைக்காக மது அருந்தும் காட்சிகளுக்கு உண்மையான மது பானத்தை அருந்துமாறு இயக்குனர் கேட்டுக்கொண்டார். அதனால் மது அருந்தி நடித்தேன் என நானி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version