முகப்பு அண்மை செய்திகள் ‘பகாசூரன்‘ படத்தை விமர்சித்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த இயக்குனர்

‘பகாசூரன்‘ படத்தை விமர்சித்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த இயக்குனர்

தமிழில் ‘பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம்‘, படங்களின் மூலம் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.ஜி. இவர்  ஜி.எம்.பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  தற்போது தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பகாசூரன்‘. இப்படம் செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ளது. சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஆன்லைன் ஆப்களின் மூலம் நடக்கும் பாலியல் குற்றங்களை பற்றி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள இப்படம் அடுத்த மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அதே தேதியில் தனுஷ் நடித்த ‘வாத்தி திரைப்படமும் வெளியாகிறது.

இந்நிலையில், ‘பகாசூரன்‘ பெரிய படமில்லை‘ என பத்திரிக்கையாளர் ஆர்.எஸ்.அந்தணன் விமர்சித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், ட்விட்டரில் வீடியோவை பகிர்ந்த இயக்குநர் மோகன் ஜி “நீங்க பகாசூரன் படத்த பத்தி பேசவே வேணாம். அது தான் நல்லது. ஓரமா நின்னு வேடிக்க மட்டும் பாருங்க சார். பெரிய பட்ஜெட் இல்லதான். ஆனால் நிச்சயம் பேசப்படுவோம்“ என பதிலடி கொடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version