தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராம்சரண் கடந்த 2012-ம் ஆண்டு தனது கல்லூரி காதலியான உபாசனா காமினேனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாளில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் உபாசனா காமினேனி.
பத்து ஆண்டு இடைவெளிக்கு பிறகு தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், நாங்கள் விரும்பும் போது நான் தாயாக மாறுவதை தேர்ந்தெடுத்ததில் உற்சாகமாக இருக்கிறேன். திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற உள்ளோம். எங்கள் குழந்தைகளை நாங்களே கவனித்துக் கொள்ள இதுவே சிறந்த நேரம் என்று நினைக்கிறேன்.
இது எங்களுடைய தனிப்பட்ட முடிவு. குழந்தைப் பெற்றுக் கொள்ளும் விஷயத்தில் இந்த சமூகத்தில் இருந்தோ எங்கள் குடும்பத்தில் இருந்தோ யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. இது எங்களுடைய உறவு மற்றும் எங்களுடைய வாழ்க்கை என்பதால் நாங்களே அனைத்து விஷயங்களிலும் முடிவெடுத்தோம் என்று தெரிவித்திருந்தார்.
தற்போது ராம்சரண்-உபாசனா தம்பதியினர் அமெரிக்கா சென்ற நிலையில் அவர்கள் குழந்தை அமெரிக்காவிலேயே பிறக்கும் என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து உபாசனா வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், எங்களுடைய குழந்தை இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த அப்போலோ மருத்துவமனையில் பிறக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
