முகப்பு அண்மை செய்திகள் நீண்ட நாள் கனவு நிறைவேறியது! விஜய் பட இயக்குனர் நெகிழ்ச்சி

நீண்ட நாள் கனவு நிறைவேறியது! விஜய் பட இயக்குனர் நெகிழ்ச்சி

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது ‘லியோ‘ படத்தில் நடித்து வருகிறார். இதில் திரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் என பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தையடுத்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை அட்லீ, கார்த்திக் சுப்பராஜ், கோபிசந்த் மாலினேனி ஆகிய இயக்குனர்கள் இயக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அது அனைத்தும் வதந்திகள், விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தான் இயக்குகிறார் என்ற செய்தி கடந்த சில நாட்களாக வெளியாகி வந்தது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தனது 68-வது படத்தை ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version