முகப்பு அண்மை செய்திகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கிய பிக்பாஸ் நடிகை

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கிய பிக்பாஸ் நடிகை

 

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆயிஷா. இவர் முதலில் திரைப்படங்கள் நடித்து வந்த நிலையில், சீரியல்களில் என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சத்யா‘ தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை ஆயிஷா. இந்த தொடரின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இதன் மூலம் பிக்பாஸிலும் என்ட்ரி கொடுத்து கலக்கிய ஆயிஷா வெளியே வந்த கையோடு தனது காதலரை அறிமுகப்படுத்தினார்.

இருவருக்கும் விரைவில் திருமணமாக இருந்த நிலையில் அதுவும் தள்ளிப்போவதாக தெரிகிறது. இந்நிலையில், நீண்ட நாட்களாக எந்தவொரு ப்ரொஜெக்டிலும் கமிட்டாகமால் இருந்த ஆயிஷா தற்போது சின்னத்திரையில் மீண்டும் சீரியலில் கமிட்டாகியுள்ளார். ஆனால் இம்முறை தமிழில் இல்லை. தெலுங்கில் ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் இரட்டை கதாபாத்திரத்தில் ஆயிஷா நடிக்க உள்ளார்.

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version