முகப்பு அண்மை செய்திகள் நானியை வரவேற்று விருந்து வைத்து அசத்திய சிவராஜ்குமார்

நானியை வரவேற்று விருந்து வைத்து அசத்திய சிவராஜ்குமார்

சமீபகாலமாக எல்லா மொழிகளிலும் பான் இந்தியா படங்களின் உருவாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதில் நடித்துள்ள முன்னணி நட்சத்திரங்கள் ஒவ்வொரு மொழியை சேர்ந்த முக்கிய நகரங்களுக்கும் சென்று தங்களது படத்தை ப்ரோமோஷன் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது ‘ஹாய் நான்னா‘ படத்தில் நடித்துள்ள நானி புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் கன்னட வெர்ஷனின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சென்ற நானி கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமாரை அவரது வீட்டில் நேரில் சந்தித்து மகிழ்ந்துள்ளார்.

அவரை வரவேற்று காலை விருந்து உபசரித்த சிவராஜ்குமார் படம் குறித்த விவரங்களை கேட்டு அறிந்து கொண்டார். இவர்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆருடன் நடந்த சந்திப்பு குறித்த ஒரு ஸ்பெஷல் புகைப்படம் ஒன்றையும் நானி சோஷியல் மீடியாவில் வெளியிட இரு தரப்பு ரசிகர்களும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version