முகப்பு அண்மை செய்திகள் நானிக்கு போட்டியாக களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்

நானிக்கு போட்டியாக களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி தற்போது ஸ்ரீகாந்த் ஓடலா இயக்கத்தில் ‘தசரா‘ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய படமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் பட டிரைலரில் நானி சரக்கு பாட்டிலை ஒரே கல்பாக அடிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். அதைப்போலவே, நேற்று (மார்ச் 22) மும்பையில் நடந்த புரமோஷனில் கீர்த்தி சுரேஷ் நானிக்கு போட்டியாக அவரது ஸ்டைலிலேயே பாட்டிலுடன் ஒரே கல்பாக குடித்தார். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version