முகப்பு அண்மை செய்திகள் நாகசைதன்யா உடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

நாகசைதன்யா உடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சைதன்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்துப் படங்களும் தோல்வியடைந்தன. கடைசியாக நடித்த ‘தேங்க் யூ, கஸ்டடி‘ படங்கள் தோல்வியைச் சந்தித்தன. இதில் ‘கஸ்டடி‘ படம் மூலம் மிகுந்த எதிர்பார்ப்புடன் முதன் முதலாக தமிழுக்கு வந்தார். அதுவும் ஏமாற்றத்தில் முடிந்தது.

தற்போது இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நடிக்கிறார். இதில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அவர் நீக்கப்பட்டு கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version