முகப்பு அண்மை செய்திகள் நடிகை பாவனா நடிக்கும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகை பாவனா நடிக்கும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி‘ படத்தின் மூலம் அறிமுகமானவார் நடிகை பாவனா. அதனைத் தொடர்ந்து ‘தீபாவளி, வெயில், அசல் ‘ போன்ற படங்களில் நடித்துள்ளார். இதற்கு இடையில் தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் சில காலம் நடிப்பதில் இருந்து விலகியிருந்தார்.

இவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். பாவனாவின் 86-வது படமான இப்படத்தை இவரின் சகோதரர் ஜெய்தேவ் இயக்கியுள்ளார். ஜூன் ட்ரீம்ஸ் சார்பில் பாவனாவின் கணவர் நவீன் ராஜன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் நடிகை பாவனாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்திற்கு ‘தி டோர்‘ என்று தலைப்புடன் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளனர்.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று இப்போது இறுதிகட்ட போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளில் படக்குழுவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விரைவில் இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version